ரஜினி தந்த காரை திருப்பி ஒப்படைத்த சத்யநாராயணா!

ரஜினி மன்றங்களின் அகில இந்திய தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்தவர் சத்யநாராயணா. இந்நிலையில் அவருக்கு தீவிர உடல் நலக்குறைவு காரணமாக தலைமைப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதில் அந்தப் பொறுப்பை தனது நண்பர் சுதாகர் நிர்வகிப்பார் என்றும் ரஜினியே அறிவித்தார்.
சத்யநாராயணாவின் போக்குவரத்து பயன்பாடுகளுக்காக ரஜினியே முன்பு ஒரு காரை அளித்திருந்தார். இப்போது ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அந்தக் காரை திருப்பி ரஜினியிடமே ஒப்படைத்துவிட்டார் சத்தி.
இரு தினங்களுக்கு முன் ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்தவர், ரஜினியிடம் கூறிவிட்டு அந்தக் காரை மண்டபத்தில் விட்டுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பினார்.
Comments


Click it and Unblock the Notifications