ரூ. 100 கோடியை எதிர்பார்க்கும் சுல்தான்!

ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா, தனது தந்தையின் கேரக்டரை வைத்து சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படத்தை இயக்கி வருகிறார். இந்தியத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவரை வைத்து அனிமேஷன் படம் வருவது இதுவே முதல் முறையாகும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார் சுல்தான்.
படம் குறித்து செளந்தர்யா கூறுகையில், வேகமாக படம் வளர்ந்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட டெக்னீஷியன்கள் இரவு பகலாக உழைத்துக் கொண்டுள்ளனர். ஆக்கர் ஸ்டுடியோவில் இந்தப் பணி நடந்து வருகிறது.
இது அனிமேஷன் படமாக இருந்தாலும் கூட, பக்கா ரஜினி படமாக இருக்கும். ரஜினி படங்களுக்கே உரிய அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் படத்தில் இருக்கும்.
இப்படத்தில் அப்பா, பாட்டு பாடுகிறார், சண்டையும் போடுகிறார். இரண்டரை மணி நேரம் ஓடக் கூடியதாக இருக்கும் இப்படம், அப்பாவின் அனைத்து முத்திரைகளும் நிறைந்ததாக இருக்கும் என்றார்.
இப்படத்தில் ரஜினியின் மனைவி லதாவும் பங்கு வகிக்கிறார். அவர் ஒரு பாடலைப் பாடவுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











