twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படத் தயாரிப்பில் குதித்த 'சன்'

    By Staff
    |

    Sun Pictures
    சன் டிவி நிறுவனம் தனது திரைப்படத்தயாரிப்புப் பிரிவான சன் பிக்சர்ஸ் நிறுவனத்ைத கோலாகலமாக தொடங்கியுள்ளது.

    தமிழ் சின்னத் திரை வட்டாரத்தில் தனக்கென தனி முத்திரையுடன் தனித்துவத்துடன் பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கும் சன் டிவி குழுமம் தற்போது படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.

    சன் பிக்சர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனம் சமீபத்தில் கோலாகலமாக தொடங்கி வைக்கப்பட்டது.

    தென்னிந்திய மொழிகள் மற்றும் வங்க மொழியில் மொத்தம் 20 சேனல்களை வைத்துள்ள சன் டிவி குழுமம், 67க்கும் மேற்பட்ட எப்.எம். ரேடியோக்களையும் நாடு முழுவதும் நடத்தி வருகிறது.

    இதுதவிர தினகரன் நாளிதழ், தமிழ் முரசு மாலை நாளிதழ், குங்குமம் வார இதழ் ஆகியவற்றையும் நடத்தி கொண்டிருக்கிறது.

    தற்போது திரைப்படத் தயாரிப்பில் நேரடியாக குதித்துள்ளது சன். சன் பிக்சர்ஸ் தொடக்க விழா சென்னையில் பிரமாண்டமான அளவில் நடந்தது. சன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் சக்ஸேனா சன் பிக்சர்ஸின் லோகோவை அறிமுகப்படுத்தினார்.

    விழாவில் திரையுலகைச் சேர்ந்த சுந்தர்.சி, ஜீவா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அன்பாலயா பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியமொழிகளில் சன் பிக்சர்ஸ் படங்கள் தயாரிக்கவுள்ளது. இதுதொடர்பாக முக்கிய கலைஞர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்களுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

    காதலில் விழுந்தேன், தீ, தெனாவெட்டு, சிவா மனசுல சக்தி ஆகிய படங்களின் உலகளாவிய விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

    விரைவில் சன் பிக்சர்ஸின் விரிவான திட்டங்கள் குறித்து விலாவாரியாக விளக்கப் போவதாக சக்ஸேனா தெரிவித்தார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X