ஜோ. - சூர்யா கல்யாண நாள்!

By Staff

Jyothika and Surya with daughter Diya
ஜோதிகாவும், சூர்யாவும் தங்களது 2வது திருமண நாளை எளிமையான முறையில் கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டத்தில் அவர்களது குழந்தை தியாவும் கலந்து கொண்டது.

வாலி படத்தில் சின்ன ரோலில் அறிமுகமாகிய ஜோதிகா, குஷி, பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, சந்திரமுகி, தெனாலி, வேட்டையாடு விளையாடு, மொழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து நடிப்பிலும், நடனத்திலும் தனி முத்திரை பதித்தார்.

அவருக்கும் சூர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்து அது செய்திகளில் அடிபட்டு, பல காலம் கழித்து இரு வீட்டாரின் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஜோதிகா, சூர்யாவின் காதலும், கல்யாணமும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் வெகு பிரசித்தம். இந்த தம்பதிக்கு தியா என்ற அழகான பெண் குழந்தை ஒரு ஆண்டுக்கு முன் பிறந்தது.

சமீபத்தில்தான் தியாவின் முதல் பிறந்த நாளை குடும்பத்துடன் ஜோதிகா-சூர்யா தம்பதியினர் கொண்டாடினர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தங்களது 2வது திருமண நாளை எளிமையான முறையில் கொண்டாடியுள்ளனர் ஜோதிகாவும், சூர்யாவும்.

இருவரும் தனித் தனியாகவும், சேர்ந்தும் திரையுலகில் ஹிட் கொடுத்தது போல இல்லற வாழ்க்கையிலும் தொடர்ந்து சூப்பர் ஹிட் கொடுக்க வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X