தெலுங்குக்குப் போகும் 'அங்காடி'!

மகேஷ், அஞ்சலியின் எதார்த்தமான நடிப்பில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற படம் அங்காடித்தெரு. சென்னை ரங்கநாதன் தெரு சூப்பர் ஸ்டோர் தொழிலாளர்களின் சோக வாழ்க்கையை அப்படியே நம் கண் முன் நிறுத்திய படம் இது.
வெயில் படத்தைத் தொடர்ந்து இப்படத்தை உருவாக்கி அனைவரையும் பிரமிக்க வைத்தார் இயக்குநர் வசந்த பாலன்.
இந்த நிலையில் தற்போது இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடவுள்ளனர். சென்னை கோதண்டபானி ஸ்டூடியோவில் டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றனாம். ஆகஸ்ட் மாதம் தெலுங்கு டப்பிங் படம் வெளியாகவுள்ளது.
Comments
angadi theru அங்காடித் தெரு தமிழ் சினிமா தெலுங்கு டப்பிங் வசந்தபாலன் tamil cinema telugu dubbing vasantha balan


Click it and Unblock the Notifications