ஒயிலாக வரும் மதுரைக்கார 'ஒச்சாயி'!

By Sudha

Daya and Thamarai
மண்ணின் மணம் கூறும் கதைக்காக மண்ணின் மகளையே நாயகியாக்கியுள்ளார் ஒச்சாயி பட இயக்குநர் ஆசைத்தம்பி.

ஆசைத்தம்பி, ஒச்சாயி என்ற பெயரில் படத்தை இயக்கி வருகிறார். ஒச்சாயி என்ற பெயர் மதுரைப் பக்க கிராமங்களில் ரொம்ப பாப்புலர். சாமி பெயர், இதனால் ஒச்சாயி, ஒச்சு என்பதெல்லாம் மிகவும் பிரபலமான பெயராகும்.

இந்தப் பெயரில் படத்தை இயக்கும் ஆசைத்தம்பி, இப்படத்தின் நாயகிக்காக மும்பைக்கோ, கேரளாவுக்கு அலை பாயவில்லை. மாறாக, மதுரையிலிருந்தே ஒரு நாயகியைப் பிடித்துப் போட்டு விட்டார்.

இதுகுறித்து ஆசைத்தம்பியிடம் கேட்டால், இது எதார்த்தமான கதைண்ணே. பெண்களைக் கவுரப்படுத்தும் கதை, அவர்களை கவர்ச்சிக்காக மட்டுமே காட்டி வரும் சினிமாக்களுக்கு மத்தியில் எனது ஒச்சாயி மிகவும் மரியாதையானவள், கெளரவமானவள், நிமிர்ந்து நிற்பவள்.

மதுரை, தேனி, திண்டுக்கல் ஏரியா கிராமங்களில் ஒச்சாயி என்ற பெயர் பிரபலமானது. அதிலும் மதுரையில் ஒச்சாயி என்ற பெயரைக் கணக்கெடுத்தால் கணக்கே இல்லாமல் நீளும். இது கடவுளின் பெயர். எனது நாயகியும் கூட கடவுள்தான்.

எனது நாயகி மதுரைக்காரப் பெண். எனவேதான் மும்பைக்கோ, கேரளாவுக்கோ போய் நாயகியைத் தேட விரும்பவில்லை. மதுரையிலேயே தேடிப் பிடித்து தாமரை என்ற அழகான மண்ணின் மகளை நாயகியாக்கியுள்ளேன்.

தாமரைக்கு சினிமா முற்றிலும் புதிது. சுத்தமாக சினிமா வாசனையே கிடையாது. ஆனாலும் தத்ரூபமாக நடித்துள்ளார். ஒச்சாயியாகவே மாறிப் போய் விட்ட தாமரை தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள அருமையான நாயகி என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X