மீண்டும் ரீமேக்கில் தங்கர்

இம்முறை தங்கர் கையில் கிடைத்துள்ள மலையாளப் படம் வருதே ஒரு பாரியா. ஜெயராம், கோபிகா இணைந்து நடித்த படம்.
70கள், 80களில் வெளியான மலையாளப் படங்களின் தீவிர ரசிகர் தங்கர் பச்சான். அப்போதெல்லாம் நல்ல வலுவான கதையம்சத்துடன் கூடிய மலையாளப் படங்கள்தான் மளமளவென வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கர்பச்சான் ஒரு கதைப் பிரியர். சதையை நம்பாமல் நல்ல கதையை மட்டுமே நம்பி படமெடுப்பவர். கதை கிடைக்காவிட்டால் சற்றும் சளைக்காமல் கிடைக்கும் வரை காத்திருக்கும் பொறுமைசாலி, கிடைத்தவுடன் அதை அருமையாக செதுக்கித் தரும் திறமை சாலி.
அவரது படங்களில் கதைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். முன்பு மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான சீனிவாசனின் சிந்தாவிஷ்யாய சியாமளா படத்தை சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற பெயரில் அட்டகாசமான படைப்பாக படைத்தார் தங்கர்.
இந்த நிலையில் வருதே ஒரு பாரியை படத்தை ரீமேக் செய்யவுள்ளார் தங்கர்.
கடந்த வாரம் தங்கர்பச்சான் இப்படம் தொடர்பாக கொச்சி சென்றிருந்தார். அங்கு அப்படத்தின் தயாரிப்பாளர் சலாவுதீன், இயக்குநர் அக்கு அக்பர் ஆகியோரை சந்தித்து ரீமேக் உரிமை தொடர்பாக பேசியுள்ளார்.
இப்படத்தை கிஷோர் மற்றும் பிரியங்காவை வைத்து தமிழில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளாராம் தங்கர்.


Click it and Unblock the Notifications











