குழந்தையை இழந்துவிட்டேன்!-அமீர் கான்

By Staff

Aamir Khan with wife Kiran Rao
மூன்றாவது குழந்தை பிறக்கும் என ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால், எனது மனைவிக்கு ஏற்பட்ட கருச்சிதைவு காரணமாக எனது குழந்தையை பிறக்கும் முன்பாகவே இழந்துவிட்டேன் என பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவி்த்துள்ளார்.

அமீர் கானுக்கும் இவரது முதல் மனைவி ரீனாவுக்கும் கடந்த 2002ல் விவாகரத்தானது. அவர்களுக்கு ஜூனைத் என்ற மகனும், எரா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 2005ல் லகான் திரைப்படத்தின் போது ஏற்பட்ட பழக்கம் காரணமாக அப்படத்தின் துணை இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவ் என்பவரை அமீர் கான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஜூன் மாதம் கிரண் கர்ப்பம் ஆனார். ஆனால், தற்போது அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அமீர் கான் தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது:

எனது ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி. நானும், என் மனைவியும் எங்கள் குழந்தையை இழந்துவிட்டோம். எவ்வளவோ முயன்றபோதும் அந்த கருச்சிதைவை தடுக்க முடியவில்லை.

கடந்த இரண்டு மாதமும் எங்களுக்கு பெரும் மனப் போராட்டமாக இருந்தது. இதனால் தான் என்னால் பிளாக்கில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. இந்த சோகத்தை மறக்க எங்களுக்கு மிக நீண்ட நாட்கள் தேவைபடும் என்று நினைக்கிறேன் என்று சோகத்துடன் எழுதியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X