twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜீ டிவியின் தமிழ் சேனல் துவங்கியது!

    By Staff
    |

    Zee Tamil Channel Launch
    இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான ஜீ டிவி தனது தமிழ் ஒளிபரப்பை நேற்றுமுதல் தொடங்கியது.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நேற்று நடந்தது.

    ஜீ என்டர்டெய்ன்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி புனித் கோயங்கா, ஜீ குழுமத்தின் தென்னிந்திய தலைமை நிர்வாகி ஜி.ராம்பிரசாத், ஜீ தமிழ் தொலைகாட்சியின் மூத்த துணைத் தலைவர் வி.சந்திரசேகர் ஆகியோர் துவக்க விழாவையொட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:

    தென்னிந்தியாவில் தெலுங்கு, கன்னட மொழிகளில் முத்திரை பதித்து வரும் ஜீ டி.வி., இப்போது தமிழிலும் தன் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இது ஜீ குழுமத்தின் 33வது சேனல். ஆனால் இது முழுக்க முழுக்க கட்டண சேனலாகும்.

    கே.பாலசந்தர், குஷ்பு, பிரபு நேபால் உள்ளிட்ட பிரபலங்களின் மெகா தொடர்கள், விறுவிறுப்பான கேம் ஷோக்கள், டாக் ஷோக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள்... கலக்கலான நிகழ்ச்சிகளுடன் ஜீ களமிறங்கியுள்ளது.

    காலை 8 மணி, மதியம் 1.30 மணி, இரவு 9 மணிக்கு செய்திகள் ஒளிபரப்பாகும். ஜீ குழுமம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதால் செய்திகள் நடுநிலையோடு இருக்கும்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தெளிவாக தெரியும். தமிழ்நாட்டில் அனைத்து கேபிள் டி.வி.க்களிலும், ஹாத்வே, அரசு கேபிள் டி.வி. மற்றும் டிஷ் டி.வி.யிலும் டிஜிட்டல் தரத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியைக் கண்டுகளிக்கலாம்.

    திரையுலக ஆதரவுச

    சுப்பிரமணியபுரம், சாது மிரண்டால், சேரனின் ஆடும்கூத்து, சில நேரங்களில், போன்ற புதுப் படங்களை வாங்கியிருக்கிறோம். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெளியான புதுப்படங்களில் 45 சதவீத படங்களை வாங்கியுள்ளோம்.

    தற்போது சரித்திரம் என்ற பெயரில் தமிழ்ப் படத்தை எடுத்து வருகிறோம். ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் சில படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் உள்ளோம்.

    அடுத்த 4 மாதங்களில் 24 மணி நேர தமிழ் செய்தி சேனல் தொடங்கப்படும். அதுபோல தமிழ் மியூசிக் சேனலும் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

    தனியார் தொலைக்காட்சி சேவையில் முன்னோடி ஜீ குழுமம். 1992ம் ஆண்டு ஜீ நெட்வொர்க்கின் தலைவர் சுபாஷ் சந்திரா, ஜீ தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார். தற்போது இந்தி, மராத்தி, வங்காளம் உள்பட 10 இந்திய மொழிகளில் 32 டி.வி. சேனல்கள் இந்தக் குழுமத்தில் இயங்கி வருகின்றன. 50 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஜீ குழும சேனல்களுக்கு உள்ளனர்.

    1998ம் ஆண்டு முதல் அமெரிக்காவிலும் ஜீ தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X