காஷ்மீர் கலவரத்தில் சிக்கிய மீரா-கார் மீது கல்வீச்சு

பங்காரு பாபு என்ற தெலுங்கு படத்தில் ஜெகபதிபாபு ஜோடியாக நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின்.
படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை, காஷ்மீரில் படமாக்கத் திட்டமிட்டனர்.
அதன்படி ஜெகபதிபாபுவும், மீரா ஜாஸ்மினும் ஞாயிற்றுக்கிழமை காஷ்மீர் சென்றனர். ஸ்ரீநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினர்.
நேற்று இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, தனித்தனி கார்களில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஜெகபதி பாபுவின் கார் முன்னால் போய்க் கொண்டிருந்தது. மீரா ஜாஸ்மின் கார் பின்னால் சென்றது.
அப்போது, கோணாமார்க் பகுதிகளில் ஒரு அமைப்பினர் திடீர் கலவரத்தில் ஈடுபட்டு அந்த வழியே சென்ற வாகனங்களை தாக்க ஆரம்பித்தனர்.
மீரா ஜாஸ்மின் மற்றும் ஜெகபதி பாபு சென்ற கார்கள் மீதும் திடீரென்று கல்வீச்சு நடந்தது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த ராணுவம் கலவரக்காரர்களை விரட்டியடித்து மீரா உள்ளிட்ட அப் பகுதியில் சென்ற அனைவரையும் கலவரத்திலிருந்து மீட்டனர்.
தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால் படக் குழு உடனே டெல்லி வழியாக விமானத்தில் ஹைதராபாத் திரும்பிவிட்டது.


Click it and Unblock the Notifications











