பொக்கிஷம்...ஏமாற்றாது என நம்புவோம்!

மற்ற படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்தத 32 படங்களில் ஒரு வாரமாவது தாக்குப் பிடித்து ஓடிய படங்கள் என்றால் 5 மட்டும்தான்.
ஏனோதானோவென்ற கதை, தடுமாறு திரைக்கதை, மோசமான பப்ளிசிட்டி போன்றவற்றால் பெரும்பாலான படங்கள் வந்த வேகத்திலேயே பெட்டிக்குத் திரும்பிவிட்டன.
இந்த வறட்சியான சூழலில்தான் காட்சிகளிலேயே கவிதைத்தனம் தெரியும் ஒரு படமாக வருகிறது பொக்கிஷம்.
காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம், 30 வருடங்களுக்கு முந்தைய காலச் சூழலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
படம் குறித்து நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது. மிகச் சிறப்பான முறையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதைவிட முக்கியமாக, படம் குறித்து, நல்ல 'டாக்' கிளம்பியுள்ளது. பொக்கிஷம் போன்ற படங்களுக்கு இதுதான் மிக முக்கியம்.
மாயக்கண்ணாடி தோல்விக்குப் பிறகு சேரன் இயக்கத்தில் வெளிவரும் படம் இது என்பதாலும் இந்த எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது. அதை நிறைவேற்றுவாரா சேரன்...? பார்க்கலாம்!.


Click it and Unblock the Notifications











