காத்ரீனா வேண்டும்- ஷாஹித் அடம்

தனது தந்தை பங்கஜ் கபூர் முதன் முறையாக தன்னை வைத்து இயக்கப் போகும் மோசம் (Mausam) என்ற படத்தில் காத்ரீனா கைபை தனக்கு ஜோடியாக போடுமாறு கூறி வருகிறாராம் ஷாஹித் கபூர்.
கரீனா கபூரின் முன்னாள் காதலர் ஷாஹித் கபூர். இவரது தந்தை பங்கஜ் கபூர், ஷாஹித்தை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். மோசம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான ஹீரோயின் வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
ஆனால் ஷாஹித் மனதில் காத்ரீனா கைப் உள்ளாராம். கரீனா, வித்யா பாலன், பிரியங்கா சோப்ரா என நடித்தாகி விட்டது. அடுத்த காத்ரீனாவுடன்தான் நடிப்பது என்று பிடிவாதமாக இருக்கிறாராம் ஷாஹித்.
மிகவும் திறமை வாய்ந்தவரான காத்ரீனாவுடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் ஷாஹித். மேலும், மோசம் பட நாயகிக்குரிய அனைத்து அம்சங்களும் காத்ரீனாவிடம் இருப்தாகவும் ஷாஹித் நினைக்கிறாராம்.
ஆனால் அப்பாவுக்கோ காத்ரீனா மீது அவ்வளவாக விருப்பம் இல்லையாம். இளம் முகமாக வேண்டும் என அவர் விரும்புகிறாராம். இதனால்தான் தொடர்ந்து நாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறாராம்.
படத்தில் நடிக்க வேண்டிய நடிகர், நடிகைகள் தேர்வை ஷாஹித்தின் சகோதரிதான் பார்த்துக் கொள்கிறாராம். அப்பாவுக்கு உதவியாக அவரும் பட வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்கிறாராம்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் படப்பிடிப்பை வைத்துள்ளார் பங்கஜ் கபூர். அதற்குள் நாயகி கிடைத்து விடுவார் என்றும் நம்பிக்கையுடன் உள்ளார். ஆனால் ஷாஹித்தோ காத்ரீனா நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications