படமாகும் அண்ணா வாழ்க்கை!

By Staff

Anna Durai with Karunanithi
தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாகும் காலம் இது. அந்த வரிசையில் பேரறிஞர் அண்ணாவின் கலையுலக வாழ்க்கையும் படமாகவுள்ளது.

கடந்த காலங்களில் பாரதியார், காமராஜர், பெரியார் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் படமாகி கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து படைத்தன.

இந்த வரிசையில், அண்ணாதுரையின் வாழ்க்கையும் படமாகப் போகிறது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகிய இரு பெரும் அரசியல் இமயங்களுக்கு குருவாக விளங்கியவர் அண்ணா. பெரியாரின் முதன்மைச் சீடர்களில் ஒருவர்.

அண்ணாவின் வாழ்க்கையை, அண்ணாவின் கலை உலகம் என்ற பெயரில், ஏ.பி.முகன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தீண்டத் தீண்ட என்ற படத்தை இயக்கியவர்.

அண்ணாவின் தத்துப் புதல்வரும், சமீபத்தில் மறைந்தவருமான டாக்டர் பரிமளம் ஏற்கனவே எழுதி வைத்த திரைக்கதையின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்படவுள்ளது.

இந்த படத்தில் அண்ணாவின் திரையுலக வாழ்க்கையையும், நாடக உலகில் அவரது பங்கையும் விரிவாக காட்டப் போகிறாராம் முகன்.

இப்படத்திற்கு முதல்வர் கருணாநிதியின் ஒப்புதலையும் பெற முயன்று வருகிறாராம் முகன்.

ஆனால் பெரியார் போல, அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை முழுமையான படமாக எடுக்கும் திட்டம் முதல்வர் வசம் உள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X