ஜெக 'ஜால' மோகினி!

By Staff

Jaganmohini movie still
ரீமேக் ஆகிக் கொண்டிருக்கும் ஜெகன்மோகினி, கவர்ச்சி மோகினிகளின் சங்கமமாக மாறிக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு படம் முழுக்க கவர்ச்சியின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறதாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமாலினியின் கவர்ச்சி மற்றும் மிரட்டல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ஜெகன்மோகினி. சிறுசு முதல் பெருசு வரை ரசித்து, மிரண்ட மிரட்டல் படம் ஜெகன்மோகினி.

கிராபிக்ஸ் வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே சிறப்பு எபக்ட்ஸில் கலக்கியிருந்த படம் ஜெகன்மோகினி.

இப்படத்தை இப்போது நமீதாவின் நடிப்பில் ரீமேக் செய்கின்றனர். ஜெயமாலினி கேரக்டரில் நமீதா நடிக்கிறார்.

நமீதா நடிப்பதால் படம் முழுக்க கவர்ச்சி தலை விரித்தாடுகிறதாம். கூடவே நிலாவும் படத்தில் இருக்கிறார். அவரும் கவர்ச்சியில் வஞ்சம் வைக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் முன்னாள் கவர்ச்சி ராணி ஜோதிலட்சுமியையும் படத்தில் சேர்த்திருக்கிறார்கள். சமீபத்தில் அவருடைய கவர்ச்சி ஆட்டத்தைப் படமாக்கியிருக்கிறார்கள்.

வயதாகி விட்டதே, எங்கே முன்பிருந்த வேகம் இருக்கப் போகிறதே என்ற நினைப்பில் நமீதா செட்டில் இருந்து அவரது ஆட்டததைப் பார்த்துள்ளார். ஆனால் ஜோதிலட்சுமியின் படு சுறுசுறுப்பான டான்ஸைப் பார்த்து பயந்தே போய் விட்டாராம்.

ஜோதி லட்சுமி ஆடி முடித்ததும், வாவ் என்று கை குலுக்கி பாராட்டி விட்டாராம்.

நமக்கு இப்பவே பயந்து வருதே..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X