இந்தி கஜினிக்கு 'யுஏ'

By Staff

Gajini
ஆமிர்கான், ஆசின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி கஜினிக்கு யு.ஏ சான்றிதழை வழங்கியுள்ளது சென்சார் போர்டு. படத்தில் இடம் பெற்ற 3 வன்முறைக் காட்சிகளுக்கு சென்சார் போர்டு கத்திரி போட்டு விட்டது.

தமிழை கலக்கிய பிரமாதப் படங்களில் ஒன்று கஜினி. ஆசினால் அழகாக நடிக்கவும் முடியும் என்பதை நிரூபித்த படம். சூர்யாவின் பிரமாண்ட நடிப்பின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய படம். ஏ.ஆர்.முருகதாஸை ஸ்டார் ரேங்குக்கு உயர்த்திய படம்.

இப்படம் ஆமிர்கான், ஆசின் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. நயனதாரா நடித்த வேடத்தில் பாலிவுட் கவர்ச்சி நாயகி ஜியா கான் செய்துள்ளார்.

நிதானமாக வளர்ந்து வந்த இப்படம் தற்போது சென்சார் போர்டின் சான்றிதழை பெற்று விட்டது.

படத்தில் 3 இடங்களில் வரும் காட்சிகளுக்கு சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவிக்கவே அவற்றை மட்டும் நீக்கி விட்டனர். இதையடுத்து யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

நீ்க்கப்பட்ட மூன்று காட்சிகளிலும் வன்முறை ஜாஸ்தி இருப்பதாக சென்சார் போர்டு காரணம் கூறியதால் அவற்றை நீக்கியுள்ளனர்.

வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று கஜினி திரைக்கு வருகிறதாம். படத்துக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போட்டுள்ளனராம். இந்திப் படம் ஒன்று அதிக அளவில் பிரிண்ட் போடப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X