கன்னடத்தில் ராஜா பிசி!

தமிழைப் போலவே பிற மொழி ரசிகர்களையும் தன் பக்கம் வைத்திருப்பவர் ராஜா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இளையராஜாவுக்கு தீவிர ரசிகர் கூட்டம் உள்ளது.
நம்மூர மந்தார ஹூவே, ஹூமலே, பல்லவி அனுபல்லவி, கீதா, நீ நன்ன கெல்லாரே, ஜன்மஜன்மத அனுபந்தா உள்ளிட்ட இளையராஜா இசையமைத்துள்ள அனைத்துப் படங்களிலுமே பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனவை.
சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் கன்னடத்தில் படு பிசியாக இருக்கிறார் இளையராஜா. ஏற்கனவே ஏகப்பட்ட கன்னடப் படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, தற்போது சரிகம, பிரேம் கஹானி, பாக்யத பெலகரா, நன்னவனு உள்ளிட்ட 6 படங்களில் பிசியாக இசையமைத்து வருகிறார் ராஜா.
Comments


Click it and Unblock the Notifications