எந்திரன் பாட்டு லீக்?

உண்மையில் பாடல்கள் எதுவும் லீக் ஆகவில்லை. காரணம் ஏஆர் ரஹ்மான் இன்னும் எந்தப் பாடலையும் மாஸ்டரிங் பண்ணவில்லை.
பெரு நாட்டில் நடந்த படப்பிடிப்பின்போது, ஒரு பாடல்காட்சிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஐஸ்வர்யாவும் நடன ஒத்திகை பார்ப்பதை செல்போனில் சிலபேர் படமாக்கி அதை யுட்யூபில் உலவ விட்டிருக்கிறார்கள். தெளிவில்லாத அந்த வீடியோவில், நாகராவில் லேசாக பாடல் ஒலிக்கிறது. ஆனால் அது என்ன பாட்டு என்று கண்டுபிடிக்கும் முன்பே நின்றுபோய், ஒன் டூ த்ரீ சத்தம் மட்டும் வருகிறது.
வேறு காட்சிகளோ, பாடல்களோ வெளியாகவில்லை. இந்தக் காட்சி கடந்த ஆண்டிலிருந்தே இணையத்தில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து எந்திரன் படக்குழுவின் முக்கிய டெக்னீஷியன் ஒருவர் நம்மிடம் கூறியதாவது:
"பாடல்களை இணையத்தில் கோட்டைவிடும் அளவுக்கு எந்திரன் படக்குழு வீக்கானது அல்ல. மீடியா உலகின் ஜாம்பவான்கள் தயாரிக்கும் படம் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்," என்றார்.
எதுக்கு வம்பு...!


Click it and Unblock the Notifications











