இந்திக்கு வந்த ஜாக்குலின்!

டிவி தொகுப்பாளினியாக இருந்து, அரசியல் செய்திகளைத் தரும் நிருபராக மாறி பின்னர் மாடலிங்கில் புகுந்தவர் ஜாக்குலின். இலங்கையின் அழகிகளில் ஒருவர். இப்போது இந்திய சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தனது சிறு வயதுக் கனவு நனவாகியுள்ள குஷியில் இருக்கிறார்.
இந்தியில் உருவாகியுள்ள அலாதின் படத்தில் நடித்துள்ளார் ஜாகுகிலின்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இலங்கையைச் சேர்ந்த பெண் என்ற போதிலும், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் பஹ்ரைனில்தான். பள்ளிப் படிப்பும் அங்குதான். பின்னர் ஆஸ்திரேலியாவில் கல்லூரிப் படிப்பு. அதன் பின்னர் இலங்கை திரும்பினேன்.
எனது தாத்தா, பாட்டியோடு வசித்து வந்தேன். பின்னர் டிவி நிலையம் ஒன்றில் பணியில் சேர்ந்தேன். 14 வயது முதலே நான் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். பஹ்ரைன் கோடை விழாவின்போது நான் நிருபராகவும் பணியாற்றினேன்.
இலங்கையில் போர்ச் சூழல் வெடித்தபோது நான் அரசியல் செய்திகளைத் தரும் நிருபராக மாறினேன்.
நான் 2006ல் மிஸ் இலங்கை பட்டத்தை வென்றுள்ளேன். அது முதலே எனது இந்தியப் பட கனவு அதிகரித்து விட்டது.
மிஸ் இலங்கைப் பட்டம் வென்றது, அதன் பின்னர் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்றதன் மூலம் எனக்கு மாடலிங் வாய்ப்புகள் நிறைய வந்தன. இந்தியாவிலிருந்தும் வந்தன.
எனக்குள் ஒரு இந்தியப் படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற வெறி இருந்து வந்தது. அது தற்போது அலாதின் படம் மூலம் நிறைவேறியுள்ளது என்கிறார் ஜாக்குலின்.
அமிதாப் பச்சன், சஞ்சய் தத், ரிதீஷ் தேஷ்முக் ஆகியோருடன் அலாதின் படத்தில் நடித்துள்ளார் ஜாக்குலின். அக்டோபர் 30ம் தேதி இப்படம் ரிலீஸாகிறதாம்.


Click it and Unblock the Notifications











