படுத்தபடி பிரச்சாரம் செய்யும் ஜுனியர் என்டிஆர்!

பிரச்சாரம் வித்தியாசமாகவும் இருக்கும், அனுதாப ஓட்டுக்களையும் அள்ளும் வகையிலும் இருக்கும் என்பதால் அவரது மாமாவும் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுதான் இந்த ஐடியாவைச் சொன்னாராம்.
இப்போது ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஜூனியர் என்டிஆர், சில நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆனார். மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நடக்க முடியவில்லை. அதேநேரம் தனது பிரச்சாரமும் இந்த தேர்தலில் இருக்க வேண்டும் என விரும்பினாராம். இதனால் படுத்துக்கொண்டே தெலுங்கு தேசத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆந்திர சேனல்களுக்கு விஷயம் தெரிவிக்கப்பட, நேற்று ஜூனியர் என்டிஆர் வீட்டு முன்பு குவிந்துவிட்டனர் சேனல்காரர்கள். பலர் இதை நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்தனர்.
பின்னர் அவரது பிரசாரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தனது முதல் 'படுத்தபடி பிரச்சார'த்தில் அவர் பேசியதாவது:
ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது. காங்கிரஸ் மந்திரிகள் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் பலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்கள். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் வளைத்து போட்டு விற்று விடுவார்கள். எனவே காங்கிரசை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
சந்திரபாபு நாயுடு மிகவும் எளிமையானவர். அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் ஆந்திராவை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றிக்காட்டுவார். எனவே ஆந்திர மக்கள் தெலுங்கு தேசத்தை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்றார் ஜூனியர் என்டிஆர்.


Click it and Unblock the Notifications











