'இனி சினிமாவை ரோட்டில் போட்டுதான் விற்கணும்!' - சேகரன்

Vizhiyil Vizhunthaval Audio Launch
திரைப்படங்கள் அதிகமாகத் தயாராகி வருகின்றன. ஆனால் அவற்றைத் திரையிட தியேட்டர்கள் இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் இனி தக்காளி, காய்கறி போல படங்களை ரோட்டில் கொட்டிதான் விற்கணும், என்றார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி சேகரன்.

புதுமுகங்கள் அஜாஸ், அனாகா மற்றும் ஷில்பா நடிக்கும் ஜி ஆண்ட்ஸ் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் முதல் படமான விழியில் விழுந்தவள் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே பாக்யராஜ் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார்.

முதல் சிடியை சிவசக்தி பாண்டியன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பங்கேற்ற கலைப்புலி சேகரன் பேச்சு விழாவின் ஹாலைட்டாக அமைந்தது.

அவர் பேசுகையில், "சினிமாவில், டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தபின், படங்கள் அதிகமாக தயாராகி வருகின்றன. அவைகளை திரையிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்காத நிலை உள்ளது.

ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். தக்காளி போன்ற காய்கறிகள் விளைச்சல் அதிகமானால், ரோட்டில் போட்டு விற்பார்கள். அதேபோல் திரைப்பட துறையிலும் விளைச்சல் அதிகமாக இருக்கிறது.

இதே நிலை தொடர்ந்தால், படங்களை ரோட்டில் போட்டு விற்கும் நிலை வரும். அந்த நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு படமெடுத்து, திட்டமிட்டு ரிலீஸ் செய்யணும்" என்றார்.

படத்தின் கதாநாயகன், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான அஜாஸ் நன்றி கூறினார்.

இந்தப் படத்துக்கு புது இசையமைப்பாளர் பொல்லாக் இசையமைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X