ஏப். 16ல் 'குருவி' பாட்டு!

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியின் முதல் தயாரிப்புதான் குருவி. தரணி இயக்குகிறார். கில்லி, திருப்பாச்சிக்குப் பிறகு ஜோடி சேர்ந்துள்ளனர் விஜய்யும், திரிஷாவும்.
படப்பிடிப்பு தற்போது முடிந்து பிரசாத் ஸ்டுடியோவில் இறுதி வடிவம் பெற்றுக் கொண்டிருக்கிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டை ஏப்ரல் 16ம் தேதி வைத்துள்ளனர். அன்று முதல் உலகம் முழுவதும் குருவியின் பாட்டைக் கேட்கலாமாம். படத்ைத மே 9ம் தேதி திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.
வித்யாசாகரின் இசையில், மொத்தம் 5 பாடல்களாம். அதில் ஒன்று மட்டும் மெலடி, மற்ற நான்கும் மிரட்டல் அடி. ஏ.என்.ஏ.கே. ஆடியோஸ் இந்தியா முழுவதும் ஆடியோவை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது. உலகின் பிற பகுதிகளில் அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.
படத்தில் விஜய்யும், பொல்லாதவன் புகழ் யோகி.பியும் இணைந்து போட்டிருக்கும் மிரட்டல் ஆட்டம் வெகுவாக பார்க்கப்படும், ரசிக்கப்படும், கேட்கப்படும் என்கிறார்கள்.
விஜய், வித்யாசாகர் காம்பினேஷனில் வெளியான பாடல்கள் அனைத்துமே ஹிட் என்பதால், படத்தின் ஆடியோவுக்கான ஆர்டர்கள் குவிய ஆரம்பித்துள்ளதாம்.
தமிழகத்தில் மட்டும் 350 தியேட்டர்களில் படத்தைத் திரையிட உதயநிதி திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











