ஒஸ்தியில் சிம்புவுடன் மல்லிகா ஷெராவத் குத்தாட்டம்!
தபாங்கின் தமிழ் ரீமேக் ஒஸ்தியில் சிலம்பரசனுடன் குத்தாட்டம் போடுகிறார் நடிகை மல்லிகா ஷெராவத்.
தபாங் படத்தில் ரொம்பப் பிரபலமான குத்தாட்டப் பாட்டு 'முன்னி பத்னம்...' இந்தப் பாடலுக்கு யாரை ஆட வைக்கலாம் என்பதில் சிண்டைப் பிய்த்துக் கொண்டனர் இயக்குநர் தரணியும் சிம்புவும்.
நயன்தாராவை ஆட வைக்க எவ்வளவோ முயன்றனர். பெரும் தொகையை சம்பளமாகத் தர முன்வந்தும் அவர் இந்த ஆஃபரை ஒப்புக் கொள்ளவே இல்லை.
அடுத்து கத்ரீனா, ஸ்ரேயா, ரீமான உள்ளிட்ட பலரையும் முயற்சி செய்து பார்த்தனர். ஒன்றும் படியவில்லை. இந்த நிலையில் மல்லிகா ஷெராவத் இந்தப் பாடலுக்கு ஆட ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழில் அவர் கடைசியாக நடித்தது கமல் ஹாஸனின் தசாவதாரம் படத்தில்தான். அதற்குப் பிறகு இந்த ஒற்றைப் பாடலுக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து சிம்பு கூறுகையில், "ஒஸ்தி படத்தில் வரும் அந்த முக்கியமான பாடலுக்கு மல்லிகா ஷெராவத் ஆட ஒப்புக் கொண்டுள்ளார். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அந்தப் பாடலை எடுக்கிறோம். படம் தீபாவளி ரிலீஸ்..." என்று தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











