'ஆம்பளையா? சர்டிபிகேட் தரணும்'-ஆச்சி ஐடியா!

சமீபத்தில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்தார் நடிகை மனோரமா.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு ஆண் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால், தனக்கு எய்ட்ஸ் அல்லது எச்.ஐவி. பாதிப்பு இல்லை என்று ஒரு சான்றிதழும், தான் ஆண்மையுடனும், மலட்டுத்தன்மை இல்லாமலும் இருப்பதாக இன்னொரு சான்றிதழும் கண்டிப்பாக தர வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரிடம் கேட்டுக் கொண்டேன்.
எனது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக மூன்று பேருமே உறுதியளித்துள்ளனர்.
சமீபத்தில் ஒரு இளம் பெண் என்னை வந்து சந்தித்தார். ஆண்மையற்ற ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு தான் படும் வேதனையை என்னிடம் தெரிவித்துக் குமுறினார். அதேபோல, எனது நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் இதே கதி ஏற்பட்டது.
இந்தக் கொடுமைக்குத் தீர்வு கண்டே ஆக வேண்டும் என்றார் மனோரமா.


Click it and Unblock the Notifications











