மெகா டிவியின் ஜனனம்

மனித வாழ்வில் ஜனனம், மரணம் ஒருமுறை மட்டுமே நிகழும். இது இயற்கையின் நீதி. இந்த நீதிக்கு மாறாக தமது சித்த மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் மனிதனின் மரணத்தை, ஜனனமாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் தொடரின் நாயகன். இயற்கையின் நீதிக்கு எதிராக தமது கணவரின் செயல்பாடுகள் குறித்து இறைவனிடம் மன்றாடும் தொடரின் நாயகி. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தில் நேயர்கள்.
இப்படி நிமிடத்திற்கு நிமிடம் விறுவிறுப்பூட்டும் கதைக் களத்துடன் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான மெகா தொடர் ஜனனம்.
நம்மையும் மீறி சில செயல்பாடுகள் நம் வாழ்வில் நடக்க என்ன காரணம்? என்ற கேள்விக்கு விடை காண முயல்கின்ற கதை பின்னணியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மெகாத் தொடரில், கணவன், மனைவி இடையே நிகழும் மனப் போராட்டத்தின் முடிவில் வென்றது மருத்துவமா? இல்லை ஆன்மீகமா? விடை காண தொடர்ந்து பாருங்கள் ஜனனம்.
மெகா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தொடரின் நாயகனாக இசையமைப்பாளர் சந்திர போஸ், மற்றும் நாயகியாக நடிகை சீதா ஆகியோர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











