குசேலன்: தியேட்டர்கள் அதிரடி-சாய்மீரா எச்சரிக்கை

By Staff

Rajini
சென்னை: குசேலன் நஷ்ட ஈட்டு பாக்கித் தொகையை தராவிட்டால் பிரமிட் சாய்மிரா, கவிதாலயா படங்களுக்கு ஒத்துழைப்பில்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடமடிக்கை எடுக்கப்படும் என பிரமிட் சாய்மிரா நிறுவன தலைவர் சாமிநாதன் எச்சரித்துள்ளார்.

ரூ. 54 லட்சம் நஷ்டம்:

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் அதன் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

குசேலன் படத்துக்கு நஷ்ட ஈடு வழங்கியதில் திருச்சி, கோவை, வடஆர்க்காடு மாவட்டங்கள் விடுபட்டுள்ளன. இதற்கான நஷ்ட ஈடு ரூ.54 லட்சத்தை வழங்கக் கோரி பலமுறை கேட்டும் பதில் இல்லை.

எனவே குசேலன் படத்தை தயாரித்த கவிதாலயாவின் படங்களுக்கும் விநியோக உரிமை பெற்ற பிரமிட் சாய்மீராவின் படங்களுக்கும் ஒத்துழைப்பு தரமாட்டோம்.

திருவண்ணாமலை, நான் கடவுளுக்குத் தடை:

முதல் கட்டமாக கவிதாலயா தயாரித்துள்ள திருவண்ணாமலை, பிரமிட் சாய்மீரா தயாரித்துள்ள நான் கடவுள் படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம், என்றார் அண்ணாமலை.

சாய்மிரா கடும் எச்சரிக்கை:

இந்த விவரம் தெரிய வந்ததும் பிரமீட் சாய்மிரா தலைவர் பி.எஸ்.சாமிநாதன் ஒரு கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

குசேலன் படத்தை நேரடியாக பிரமிட் சாய்மிரா மூலம் வெளியிட்ட தியேட்டர் அதிபர்கள் அனைவருக்கும் தர ஒப்புக் கொண்ட தொகை முழுவதையும் பிரமிட் சாய்மிரா தந்து விட்டது.

திரை அரங்கு உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ள திருச்சி, கோயம்புத்தூர், வட ஆற்காடு, ஏரியாக்களை பொறுத்தவரை, எங்களின் வியாபார ஒப்பந்தம் விநியோகஸ்தர்களுடன்தானே தவிர தியேட்டர் அதிபர்களோடு அல்ல.

ஆகவே அந்த ஏரியாக்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை விநியோகஸ்தர்களிடம் மட்டுமே தர முடியும்.

நியாயமாகப் பார்த்தால், தியேட்டர்காரர்களுக்கு நாங்கள் எந்த நஷ்ட ஈடும் தர வேண்டியதில்லை. தேவையில்லாமல் பிரச்சினை செய்து நன்றாக ஓடிக் கொண்டிருந்த படத்துக்கு எதிர்மறை விளம்பரம் செய்து கெடுத்ததே இவர்கள்தான்.

குறைந்தபட்ச வியாபார தர்மம் கூட இல்லாமல், இவர்கள் மனம் போனபடி அறிக்கை விட்டதால், இதுவரை தியேட்டர் உரிமையாளர்களுக்கு திரும்பத்தந்த தொகை போக மீதித் தொகையை குசேலன் பட தயாரிப்பாளரிடமே திருப்பிதர முடிவெடுத்துவிட்டோம்.

இனி இந்த பிரச்சனையில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.

இதற்கு பிறகும் எங்களை சம்பந்தப்படுத்தி அறிக்கைகள் வெளிவருமானால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை நடந்த எல்லாவற்றையும் வெளியே சொல்லி பலரது முகத்திரைகளை கிழிக்க முடிவெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என எச்சரித்துள்ளார் சாமிநாதன்.

'குபேரனே' நேரில் வந்தால் கூட 'குசேலன்' பிரச்சினை தீராது போலிருக்கே..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X