twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சம்மனுடன் பிரபுதேவா-நயனைத் தேடியலையும் கோர்ட் அமீனா!!

    By Sudha
    |

    பிரபுதேவா- நயன்தாரா திருமணத்தை எதிர்த்து அவரது மனைவி ரம்லத் குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மன்களை வேண்டுமென்றே பிரபுதேவாவும் நயன்தாராவும் வாங்காமல் தவிர்த்துவிட்டது தெரிய வந்துள்ளது.

    இந்த வழக்கில் முதல் சம்மன் அனுப்பப்பட்ட போது இருவரும் ஆஜராகவில்லை. எனவே இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அதையும் இருவரும் வாங்கிக் கொள்ளவில்லையாம்.

    பிரபுதேவா வீட்டில் ஆள் இல்லை என்று திரும்பியது. நயன்தாரா சம்மன் நடிகர் சங்கத்துக்கு அனுப்பப்பட்டு மானேஜர் வாங்க மறுத்ததால் திரும்பியது.

    இதையடுத்து 2-வது சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அதையும் இருவரும் வாங்கவில்லை. திட்டமிட்டு இருவரும் வாங்க மறுப்பதாக ரம்லத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இதையடுத்து கடந்த மாதம் 23-ந்தேதி குடும்ப நல நீதிமன்றம் 3-வது சம்மனை அனுப்பி வைக்க உத்தரவிட்டது. இந்த சம்மனையும் இதுவரை இருவரும் வாங்கவில்லை. கோர்ட்டு மூலமும், கொரியரிலும் பதிவு தபாலிலும் இவைகள் அனுப்பப்பட்டன. கோர்ட்டு சம்மனை அமீனா கையில் வைத்துக் கொண்டு தேடி அலைகிறார்.

    நயன்தாராவின் கேரள முகவரிக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் ஆள் இல்லை என திரும்பியுள்ளன. எனவே இந்த சம்மன்களும் வாங்கப்படாமல் திரும்பும் சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. சம்மனை வாங்காவிட்டால் அடுத்து என்ன செய்யலாம் என்று வக்கீல்களுடன் ரம்லத் ஆலோசனை நடத்துகிறார். காவல் நிலையத்தில் புகார் தரலாமா என்றும் யோசித்து வருகிறாராம் ரம்லத்.

    ஒரு சாமானியன் ஏதாவது தவறு செய்து விட்டால் அல்லது புகாருக்கு உள்ளாகி விட்டால் உடனே பிடித்து உள்ளே போட்டு விடுகிறார்கள். ஆனால் பிரபலங்கள் இப்படி ஏதாவது சிக்கினால் ரொம்பத்தான் அலைய விடுகிறார்கள்.

    English summary
    Prabhu Deva and his illegal affair Nayanthara have dodged the family court servant who is searching them with summons in Prabhu Deva"s first wife Ramlath case. According to the sources, Ramlatha is discussed with his advocate to give complaint in police station.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X