ராம.நாராயணனுக்கு எதிராக ராதிகா

தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூலை 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தலைவர் பதவிக்கு ராம.நாராயணன் மீண்டும் போட்டியிடுகிறார். அவருடன் தற்போதைய நிர்வாகிகள் மீண்டும் போட்டியிடவுள்ளனர்.
இந்த நிலையில் ராம.நாராயணன் அணிக்கு எதிராக புதிய அணியை உருவாக்கி போட்டியில் குதிக்க இயக்குநர், தயாரிப்பார் கேயார் முயற்சி எடுத்து வருகிறார்.
தலைவர் பதவியில் மாற்றம் வர வேண்டும் என கேயார் கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், தலைவர் பதவிக்கு ராதிகாதான் பொருத்தமானவராக இருப்பார். தற்போதைய தலைவரை விட ராதிகா சிறப்பான முறையில் செயல்படுவார்.
பஞ்சு அருணாச்சலம், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.எம்.ரத்னம் போன்றோரும் எங்களது அணியின் சார்பில் போட்டியிடவுள்ளனர். நான் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடவுள்ளேன். எங்களுக்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
தற்போது ராதிகாவின் கணவரும், நடிகருமான சரத்குமார் நடிகர் சங்கத் தலைவராக உள்ளார். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ராதிகா போட்டியிடவிருப்பது விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











