திருநாவுக்கரசர் மகள் திருமணம்... ரஜினி வாழ்த்து!

By Chakra

Rajini wishes Thrunavukkarasar Daughter Wedding
முன்னாள் மத்திய - மாநில அமைச்சர் திருநாவுக்கரசர்-டி.ஜெயந்தி தம்பதியின் மூத்த மகள் டி.சத்யா ராஜேஷ்வரிக்கும், தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் கண்காணிப்பு பொறியாளரான கே.விஜயகுமார்-வி.இன்பவேணி தம்பதியின் மகன் கே.வி.ரவி கார்த்திக்கேயனுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நீண்ட கால நண்பர் திருநாவுக்கரசர். எனவே, இந்தத் திருமணத்தில் ரஜினி பங்கேற்றதோடு, மணமக்களை வாழ்த்தியும் பேசினார்.

ரஜினியின் பேச்சு:

"திருநாவுக்கரசர் எனக்கு 30 ஆண்டுகால நண்பர். அவரும் நானும் பல இடங்களுக்கு சென்று இருக்கிறோம். பழகியிருக்கிறோம். நான் அவரிடம், 'டெல்லி பக்கம் செல்கிறீர்களே, டெல்லி காற்று உங்களுக்கு ஒத்து போகிறதா?' என்று. அதற்கு அவர் சிரித்துக்கொண்டே பதில் கூறுவார்.

இப்போது மீண்டும் இங்கேயே திரும்பி விட்டார். சந்தோஷமாக இருக்கிறது.

அவர் இங்கே அரசியலில் இருக்க வேண்டும் என்று அறந்தாங்கி மக்கள் விரும்புகிறார்கள். முதல்வர் கருணாநிதி அடிக்கடி சொல்வார், 'உங்க தொகுதிகளை கவனித்துக் கொள்ளுங்கள்' என்று. இதை திருநாவுக்கரசர் சரியாகச் செய்கிறார். தொகுதியை சரியாக கவனித்து வருகிறார்.

மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்..." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X