Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அக்டோபர் 1-ம் தேதி ரஜினியின் எந்திரன்?
'எந்திரன் படம் விரைவில் வரும் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்களே தவிர, என்ன தேதி என்று மட்டும் சொல்ல மாட்டேங்குறாங்களே', என ரஜினி ரசிகர்கள் கட்டுப்படுத்த முடியாத ஆர்வத்துடன் சலித்துக் கொள்கிறார்கள்.
இப்போது அவர்களின் சலிப்பை களிப்பாக்கும் விதத்தில் அக்டோபர் 1-ம் தேதி எந்திரனை உலகம் முழுக்க வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
ஆரம்பத்தில் செப்டம்பர் 24-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்தி ட்ரைலரிலும் அதே போல அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமிழ் ட்ரைலரில் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல், "விரைவில் வருகிறது" என்று மட்டும் குறிப்பிட்டிருந்தனர்.
இப்போது கிராபிக்ஸ் பணிகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளது எந்திரன் டீம். செப்டம்பர் 24-ம் தேதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்துவிடும் என்றும், அக்டோபர் முதல் தேதி உலகம் முழுக்க எந்திரன் வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் தரப்பில் விநியோகஸ்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி ரோபோவை மிகப் பிரமாண்டமாக வெளியிடுகிறார்கள். 1000-க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் இந்தியில் வெளியாகின்றன. இந்தி ரோபோவுக்கு போட்டியாக வேறு எந்த இந்திப் படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.