4வது முறையாக மாற்றிய ஷங்கர்!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் - ஷங்கர் இணைந்து கொடுக்கவுள்ள பிரமாண்டப் படம் ரோபோட். இப்படத்தின் பூர்வாங்க வேலைகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இப்படத்தின் கேமராமேன், நான்காவது முறையாக மாற்றப்பட்டுள்ளார். நீரவ் ஷாவில் ஆரம்பித்து தற்போது ரத்னவேலில் வந்து நிற்கிறார் ஷங்கர்.
அவரும், ஷங்கரும் 3 வார கால உலக டூரில் இறங்கியுள்ளனர். படத்திற்கான லொகேஷன்களைப் பார்க்கவே இந்தப் பயணம். தற்போது அவர்கள் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவுக்கு செல்லவுள்ளனர். பின்னர் அங்கிருந்து பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவுக்கு செல்கின்றனர்.
ரஜினியின் யோசனைப்படி வியட்நாமுக்கும் செல்லவுள்ளனர். அங்குள்ள ஹனோய் நகரில் ஒரு பாடலைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.
மேலும், வியன்னாவில் ஐஸ்வர்யா ராய், ரஜினி சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியும் படம் பிடிக்கப்படவுள்ளதாம்.
ஆகஸ்ட் 2வது வாரத்தில் ரோபோட் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











