twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அயர்லாந்துப் பெண்ணுடன் சல்மான் ருஷ்டி காதல்!

    By Staff
    |

    Salman Rushdie with Padma Lakshmi
    இந்திய வம்சவாளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தன்னை விட பாதி வயதுடைய அயர்லாந்துப் பெண்ணுடன் காதல் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    இந்தியாவில் பிறந்தவரான சல்மான் ருஷ்டி இங்கிலாந்தில் குடியேறி அந்நாட்டுப் பிரஜையாக மாறி வாழ்ந்து வருகிறார். இவர் எழுதிய சாத்தானிக் வெர்சஸ் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

    ருஷ்டி இதுவரை மொத்தம் நான்கு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடைசியாக சென்னையைச் சேர்ந்தவரான பத்மாலட்சுமியை மணந்தார். ஆனால் இந்த மண வாழ்க்கையும் நீடிக்கவில்லை. கடந்த ஆண்டு பத்மா லட்சுமியை விவாகரத்து செய்தார் ருஷ்டி.

    இந் நிலையில் தன்னை விட பாதி வயதுடைய அய்மி முல்லின்ஸ் என்கிற அயர்லாந்துப் பெண்ணுக்கும் (ருஷ்டிக்கு 60, அய்மிக்கு 32) இடையே காதல் மலர்ந்துள்ளதாம்.

    சமீபத்தில் மன்ஹாட்டனில் உள்ள சோஹோ கிராண்ட் ஹோட்டலுக்கு இருவரும் ஜோடியாக வந்தனர். சல்மான் ருஷ்டியின், அய்மியின் தோளில் கை போட்டபடியே வந்தார்.

    இருவரும் மிகவும் நெருக்கமாக பழகுவதாகவும், காதல் மலர்ந்திருப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது.

    சல்மான் ருஷ்டியுடனான நட்பு குறித்து அய்மி கூறுகையில், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள்.

    இன்று முழுவதும் நாங்கள் சேர்ந்த இருக்கிறோம். காலையில் ஒரு படம் பார்த்தோம். அவரும் நானும் சேர்ந்து மது அருந்தினோம். நான் குறைவாகத்தான் அருந்தினேன். சுற்றி சுற்றி டயர்ட் ஆகி விட்டேன். இருந்தாலும் இன்று முழுவதும் சுற்றிக் கொண்டே இருக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    அய்மியின் கதை வித்தியாசமானது. அவரது பெற்றோர் அயர்லாந்தைச் சேர்ந்தவர்கள். உழைக்கும் வகுப்பைச் சேர்ந்தவர்கள். பின்னர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர்கள். ருஷ்டியை விட 28 வயது குறைந்தவர் அய்மி.

    பிறந்தபோதே அவரது கால்களில் எலும்புகள் வளர்ச்சி இல்லாமல் இருந்தன. இதனால் ஒரு வயதாக இருக்கும்போதே, முழங்கால்களுக்கு கீழே இரு கால்களையும் மருத்துவர்கள் துண்டித்து எடுத்து விட்டனர்.

    அதன் பின்னர் அவர் செயற்கைக் கால்களுடன் வாழ்ந்து வருகிறார். இருப்பினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், மன வலிமையாலும், முயற்சியாலும் தடகள வீராங்கனையாக மாறினார் அய்மி.

    1996ம் ஆண்டு நடந்த உடல் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் நீளம் தாண்டுதலில் புதிய உலக சாதனைகளைப் படைத்தவர் அய்மி.

    மிகச் சிறந்த ஊனமுற்ற தடகள வீராங்கனை என்ற பாராட்டுக்களையும் பெற்றவர். இதுதவிர மாடலிங்கிலும் கலக்கி வருகிறார் அய்மி. ஏகப்பட்ட கேட் வாக் நிகழ்ச்சிகளில் அய்மியைக் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X