இஷிதா-வேதிகா-சாந்தனு.. பாட்டு

இயக்குநர் கே.பாக்யராஜின் மகள் சரண்யா ஏற்கனவே நடிகையாகி விட்டார். இந்த நிலையில் அவரது மகன் சாந்தனுவும் ஹீரோவாகியுள்ளார். அவர் முதன் முறையாக நாயகனாக நடித்துள்ள சக்கரக்கட்டி படத்தின் பாடல் ஜூலை 11ம் தேதி வெளியிடப்படுகிறது.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் புதல்வர் கலாபிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். கலாபிரபுவுக்கும் இது முதல் படம். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மொத்தம் 6 பாடல்கள் படத்தில் இடம் பெறுகின்றன.
சோனி பிஎம்ஜி இப்படத்தின் பாடல் உரிமையை வாங்கியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஐ லவ்யூ டா பாட்டுக்காக பெருமளவில் செலவிட்டுள்ளனராம். இப்பாடலில் நியூயார்க் நகரம் 500 ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக காட்டியுள்ளாராம் கலா பிரபு.
ஏற்கனவே படம் சிறப்பாக வந்திருப்பதாக பாக்யராஜ் பாராட்டியுள்ளார். பாடல்களிலும் ரஹ்மான் ரகளை செய்திருப்பார் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications











