சிம்ரன்... மீண்டும் குவா குவா!

மூன்று நான்கு படங்களில் சைடு ரோல்களில் நடித்தார். ஆனால் வாரணம் ஆயிரம் படத்தில் இவர் தோற்றத்தைப் பார்த்தபிறகு, கிடைக்கவிருந்த ஓரிரு வாய்ப்புகளும் இல்லாமல் போயின. மலையாள- தெலுங்குப் படங்களும் சிம்ரனுக்கு கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் இப்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளாராம் சிம்ரன். இந் நேரம் பார்த்து அவரிடம் கால்ஷீட் கேட்டுப் போயிருக்கிறார் ஹிதேஷ் ஜபக். படம் மாப்பிள்ளை.
தனுஷுக்கு மாமியாராக நடிக்கக் கேட்டாராம். மனசுக்குள் அந்த ரோலில் நடிக்க ஆசை இருந்தாலும், வயிற்றுப் பிள்ளையை எண்ணி வாய்ப்பை மறுத்துவிட்டாராம் சிம்ரன்.
இப்போது அந்த ரோலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார் அனு ஹாசன்.
Comments


Click it and Unblock the Notifications