twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சட்டக் கல்லூரி வன்முறை படமாகிறது!

    By Staff
    |

    Parthiban with Meena in Vetrikoddikatu
    சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறையை கண்டிக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெறுகின்றன, சிவசக்தி பாண்டியன் எழுதி தயாரிக்கும் சூரியன் சட்டக் கல்லூரி திரைப்படத்தில்.

    வான்மதி, காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, கண்ணெதிரே தோன்றினாள், காதலே நிம்மதி, வெற்றிக் கொடி கட்டு, கடல்பூக்கள், ராமகிருஷ்ணா போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த சிவசக்தி பாண்டியன், எஸ்.எஸ்.மூவிமேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம், சூரியன் சட்டக் கல்லூரி.

    இப்படத்தின் கதையை சிவசக்தி பாண்டியன் எழுத, பழனியப்பா கல்லூரி படத்தை இயக்கிய பவன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

    கஜினி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மித்ரா நடிக்கிறார். பவன், கஞ்சா கருப்பு, ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி, காதல் சுகுமார், தமிழ்குமரன், கே.ஆர்.செல்வராஜ், ராஜலட்சுமி, தம்பி சாமி, சாம், வெங்கையா பாலன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    மாறுபட்ட கதைகளை படம் எடுக்க வேண்டும் என்பதை தன் பாணியாக வைத்திருக்கும் சிவசக்தி பாண்டியன் இதுவரை ஆக்ஷன் கதையை மட்டும் படமாக எடுத்ததில்லை. முதல்முறையாக இந்தப் படத்தில் ஆக்ஷன் கதையுடன் களமிறங்கி
    இருக்கிறார்.

    சூரியன் சட்டக் கல்லூரி படத்தின் கதை அம்சம் இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே தேவையான ஒன்றாகவும் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் சிவசக்தி பாண்டியன்.

    'ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நம் நாட்டின் நீதித்துறை கவனமாக இருக்கிறது. ஏழை எளியோர், படிப்பறிவில்லாத பாமரர்கள் நீதிமன்றத்தில் தங்களின் வாதத்தை எடுத்து வைக்க வசதியாகவே வழக்கறிஞர்கள் உருவாக்கப்பட்டார்கள். ஏழைகளுக்கு நீதி கிடைக்க மட்டுமல்ல நம் நாட்டின் நீதியைக் காக்கும் காவலர்களாகவும் இவர்கள் விளங்க வேண்டும் என்பதையே சட்டக் கல்லூரிகளும் போதிக்கின்றன. அப்படிப்பட்ட சட்டக் கல்லூரிகளில் அரசியல் புகுந்து அந்த காம்பஸை வன்முறைக்களமாக மாற்றிவிட்டது.

    சூரியன் சட்டக்கல்லூரி திரைப்படத்தின் கதாநாயகன் இப்படிப்பட்ட வன்முறைக்கு எதிராக களத்தில் இறங்கி, சட்டம்
    பயிலும் மாணவர்கள் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடாது என்று போராடுகிறான். அவனது போராட்டம் வெற்றியடைவதோடு, அவனது செயலை பாராட்டி குடியரசு தலைவரே அவனுக்கு விருது வழங்கி அவனது பணியை பாராட்டுகிறார் என்று நல்ல பாடமாக உருவாகி வருகிறது இந்தப்படம் என்கிறார் பாண்டியன்.

    சமீபத்தில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறைக் காட்சிகளையும் படத்தில் காட்டும் திட்டமுள்ளதாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X