காதலர் தின ஸ்பெஷல் 'எஸ்எம்எஸ்'!

By Staff

Jeeva with Anuya
காதலர் தின ஸ்பெஷலாக வந்துள்ள விகடன் டாக்கீஸின் சிவா மனசுல சக்தி நிஜமாகவே காதலர் தின ஸ்பெஷல்தான் என இளைஞர்கள் பாராட்டுகின்றனர்.

இந்தப் படத்தின் முதல் நாள் காட்சிக்கு காதலர்களும் மாணவர்களும் குவிந்துவிட்டனர்.

எதிர்பார்த்ததை விட படம் நன்றாக இருப்பதாகவும், இரண்டரை மணிநேர ஜாலி சிரிப்பு சவாரி இந்த எஸ்எம்எஸ் என்றும் பாராட்டுகிறார் படம் பார்த்துவிட்டு புன்னகைத்த வாயுடன் வந்த இளைஞர் ஒருவர்.

'காதலர் தினம். காதலர்கள் சந்தோஷமாய் கொண்டாட இந்த எஸ்எம்எஸ் பாருங்க,' என சக காதலர்களுக்கு பரிந்துரைக்கிறார்கள் வாணி-மகேஷ் காதல் ஜோடி.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆனந்த விகடன் நிறுவனம் இந்தப் படம் மூலம் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

ஜீவா-அனுயா நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட். இந்தப் படத்துக்கு இந்த வார இறுதி முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன எனகிறார்கள் மாயாஜால் அரங்கில். காதலர் தினத்துக்காக காட்சிகளை கூடுதலாக்கியுள்ளனர் மாயாஜாலில்.

இந்தப் படத்துடன் வெளியாகியுள்ள கலைஞர் தொலைக்காட்சி தயாரிப்பான பெருமாள் படத்துக்கும் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நமீதா, மீனாட்சி நடித்துள்ள இந்தப் படத்துக்கும் முக்கிய திரையரங்குகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு நல்ல புக்கிங் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X