எல்லாப் பாடல்களும் எனக்கே!- ஸ்ருதியின் பலே கண்டிஷன்

கமல்ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி, பாடகியாகவும், இசையமைப்பாளராகவும், நடிகையாகவும் திகழ்கிறார்.
இந்தியில் லக் என்ற படம் நடித்தார். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. அடுத்து தந்தை தயாரித்து நடித்த உன்னைப் போல் ஒருவன் படத்தின் இசையமைப்பாளரானார்.
இப்போது ஒரு தெலுங்குப் படம் நடித்துவரும் ஸ்ருதி, அதற்கடுத்து தமிழில் சூர்யாவுக்கு ஜேடியாக நடிக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் இசை ஹாரிஸ் ஜெயராஜ். சமீபத்தில் இந்தப் படம் குறித்த டிஸ்கஷனுக்கு வந்திருந்தார் ஸ்ருதி. அப்போது, 'இந்தப் படத்தில் நடிப்பதில் எனக்கு 50 சதவிகிதம்தான் ஓகே. எல்லாப் பாட்டும் எனக்கே கொடுப்பதாக இருந்தால் 100 சதவிகிதம் ஓகே" என்றாராம் இயக்குநர் முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம்.
சற்றே யோசித்த முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜைப் பார்க்க அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.
'இப்போதான் எனக்கு 100 சதவிகிதம் திருப்தி' என்று மகிழ்ச்சியுடன் சென்றாராம் ஸ்ருதி!


Click it and Unblock the Notifications











