பாங்காக்கில் 'இடி' ஆலோசனை!

கமர்ஷியல் படங்களில் கில்லாடி என்ற பெயரைப் பெற்றவர் ஷக்தி சிதம்பரம். ரசிகர்களுக்கு எது தேவையோ அதை திகட்டாமல், தருபவதில் பலே இயக்குநர்.
காமெடிப் படங்களுக்குப் பெயர் போன ஷக்தி சிதம்பரம் முதல் முறையாக இயக்கிய அதிரடிப் படம் சண்டை. ஹிட் ஆகி விட்ட இந்தப் படத்தால் இனிமேல் ஆக்ஷன் படங்களை மட்டுமே எடுக்கப் போவதாக கூறி வருகிறார் ஷக்தி.
தற்போது சுந்தர்.சியை வைத்தே அடுத்த படத்தையும் இயக்குகிறார். இதில் நமீதாதான் நாயகி. ஷக்தியின் படங்களில் தவறாமல் இடம் பெறும் நமீதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். படம் முழுக்க கிளாமரில் கலகலக்க வைப்பாராம்.
இடி படத்தில் என்னென்ன விஷயங்களை இடம் பெறச் செய்வது, கதையை எப்படி ஷேப் செய்வது என்பது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக சுந்தர்.சியும், ஷக்தி சிதம்பரமும் பாங்காக் பயணமாகியுள்ளனாரம்.
அங்கு வைத்து இடி குறித்து தீவிர ஆலோசனை நடத்தி கதையை இறுதி செய்த பின்னர் சென்னை திரும்பவுள்ளனராம்.
தற்போது சுந்தர்.சி கை நிறையப் படங்கள் இருக்கின்றன. பெருமாள், தீ, ஐந்தாம்படை, ஆயுதம் செய்வோம் என வரிசை காட்டி காத்திருக்கின்றன. இதையெல்லாம் முடித்து விட்டு 'இடி'க்க வருகிறாராம் சுந்தர்.சி.


Click it and Unblock the Notifications











