கமலுடன் இணைந்து நடிக்கும் உதயநிதி

உன்னைப்போல் ஒருவன் படத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் புதிய படத்தை மிஷ்கின் இயக்குவதாகக் கூறப்பட்டது. இந்தப் படம் மிகப் பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ளது.
இந் நிலையில், மிஷ்கின் ஸ்கிரிப்ட் தயாராக இன்னும் அவகாசம் தேவைப்படுவதால், அதற்குள் கே.எஸ்.ரவிக்குமாரை வைத்து ஒரு குறுகிய கால பட்ஜெட் படத்தைத் தரும் எண்ணத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் கமல்.
இந்தத் தகவலையும், கமலே சமீபத்தில் தெரிவித்தார். ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப்படம் ஆக்ஷன், காமெடி இணைந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகிறது.
இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு, கமலுடன் இணைந்து உதயநிதி நடிப்பது. ஏற்கெனவே ஆதவன் படத்தில் கேஎஸ் ரவிக்குமாருடன் க்ளைமாக்ஸில் தோன்றுவார் உதயநிதி. இப்போது முழுப் படத்திலும் வருமாறு அவருக்கு கேரக்டர் அமைத்துள்ளாராம் ரவிக்குமார்.


Click it and Unblock the Notifications











