சீமா மகள்- 'சிலந்தி' முன்னா கல்யாணம்!

By Staff

Seema with daughter Anu
சிலந்தி பட நாயகன் முன்னாவுக்கும், மலையாள இயக்குனர் ஐ.வி.சசி-நடிகை சீமா தம்பதியின் மகள் அனுவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

எம்.பி.ஏ படித்துள்ள அனுவை சினிமாவில் நுழைத்தனர் சசியும் சீமாவும். ஆனால், அனுவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தமிழில் காதல் டாட் காம் என்ற படம் உள்பட சில படங்களில் ஹீரோயினாக வந்துவிட்டுப் போனதோடு சரி. அதேபோல மலையாள சினிமாவிலும் அனுவால் நிலைக்க முடியவில்லை. இந் நிலையில் தான் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

சமீபத்தில் வந்த சிலந்தி படத்தில் 'கிளுகிளு' மோனிகாவுடன் இணைந்து நடித்த முன்னாவை கரம் பிடிக்கிறார் அனு.

வடபழனியில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. அதில் அனுவுக்கு, முன்னா திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்தார். அதேபோல முன்னாவுக்கு அனுவும் மோதிரம் போட்டார்.

நிகழ்ச்சியில் மலையாள நடிகை ஷீலா, நடிகர்கள் ராதாரவி, அருண் விஜய், உதயா, ரஹ்மான், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னா ஒரு பிசியோதெரபிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. அனுவைப் போலவே முன்னாவுக்கும் சொந்த ஊர் கேரளா தான். வரும் நவம்பர் 10ம் தேதி கேரளாவில் திருமணம் நடைபெறவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X