சிக்கலில் '3 இடியட்ஸ்'!

By Staff

Madhavan, Aamir Khan and Sharman Joshi
அமீர் கான்- மாதவன் நடிப்பில் வெளி வரவிருக்கும் '3 இடியட்ஸ்' திரையைத் தொடும் முன்பே சிக்கலில் சிக்கியுள்ளது.

இந்தப் படத்தின் லாபத்தைப் பங்கிடுவதில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா, படத்தின் வருவாயில் பெரும்பகுதி தனக்கே தரப்பட வேண்டும் என்று அதன் வெளியீட்டாளர்களான பிவிஆர் சினிமாஸ், ஐநாக்ஸ் லீஷர், சினிமாக்ஸ் இன்டியா, ஃபேம் இந்தியா, ஃபன் சினிமாஸ் மற்றும் பிக் சினிமாஸ் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இந்த 5 நிறுவனங்களுமே இந்தியாவில் முன்னணி திரையரங்க உரிமையாளர்களாகவும் உள்ளனர்.

படம் வெளியான முதல் வாரம் தனக்கு 52 சதவிகித பங்கு வேண்டும் என்றும், இரண்டாவது வாரம் 47.5 சதவிகிதமும், மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களில் 40 சதவிகித வருவாய் தரப்பட வேண்டும் என்றும் சோப்ரா கேட்டுள்ளார்.

ஆனால் இதனை மல்டிப்ளெக்ஸ் நிறுவனங்கள் ஏற்கவில்லை. கடந்த ஜூன் மாத ஒப்பந்தப்படி, முதல்வாரம் 52.5 சதவிகிதமும், இரண்டாம் வாரம் 45 சதவிகிதமும், மூன்றாம் மற்றும் நான்காம் வாரங்களில் 30 சதவிகிதமும் தயாரிப்பாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதைத்தான் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள்.

அமீர்கான், சர்மான் ஜோஷி, மாதவன் மற்றும் கரீனா கபூர் நடித்துள்ள இந்தப் படம் ரூ 35 கோடியில் தயாராகியுள்ளது. ரூ 80 கோடிக்கு இந்தப் படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ். படத்தின் விநியோக உரிமை பிக் பிக்சர்ஸிடம் இருந்தாலும், லாபத்தில் உரிமையுள்ளவர் என்ற முறையில் மல்டிப்ளெக்ஸ் நிறுவனங்களுடன் பேரம் பேசி வருகிறார் விதுவினோத் சோப்ரா.

இந்தப்படம் கிறிஸ்துமஸ் ரிலீஸ் என்பதால், இந்த வாரத்துக்குள் பிரச்சினை தீர்ந்துவிட வேண்டும் என்பதே தியேட்டர்காரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X