'தாரே ஜமீன் பர் ..' ஆஸ்கர் இல்லை!

By Staff

Taare zameen par
சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான விருதுப் போட்டியிலிருந்து இந்தியாவின் தாரே ஜமீன் பர் நீக்கப்பட்டு விட்டது. இதனால் தாரே ஜமீன் பர் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைப்பதற்கான வாய்ப்பு போய் விட்டது.

ஆமிர்கான் இயக்கத்தில், சிறுவன் தர்ஷீல் சபாரியின் அபார நடிப்பில் உருவாகி இந்தியாவையே நெகிழ வைத்த படம் தாரே ஜமீன் பர்.

இப்படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் தற்போது இறுதிச் சுற்றுக்கான பட்டியலிலிருந்து தாரே ஜமீன் பர் நீக்கப்பட்டு விட்டது. இதனால் ஆஸ்கர் வாய்ப்பு பறி போய் விட்டது.

சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் மொத்தம் 9 படங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் தாரே ஜமீன் பர் இடம் பெறவில்லை.

இஸ்ரேலிய டாக்குமென்டரிப் படமான வாட்ஸ் வித் பஷீர், ஜெர்மனியின் பதர் மெய்ன்ஹாப் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளிநாட்டுப் பிரிவில் இடம் பெற்றுள்ளன.

பிப்ரவரி 22ம் தேதி ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆமிர்கானின் லகான் ஆஸ்கர் வெளிநாட்டுப் படப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறி புதிய சாதனை படைத்திருந்தது என்பது நினைவிருக்கலாம். அந்த சாதனையை மீண்டும் ஆமிரின் தாரே ஜமீன் பர் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X