சந்தோஷமான தம்பதி: ஐஸ்வர்யா -அபிஷேக் முதலிடம்

காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு இணையதளம் இதுதொடர்பான கருத்துக்கணிப்பை நடத்தியது. சுமார் 3.6 லட்சம் பேர் இதில் தங்களின் ஓட்டை பதிவு செய்தனர்.
இதில், ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஜோடி தான் மிகவும் சந்தோஷமான தம்பதி, தாங்கள் விரும்பும் தம்பதி என 32 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
அடுத்த இடத்தை ஷாருக்கான்-கௌரி ஜோடி பெற்றுள்ளது. இவர்களை 29 சதவீதம் பேர் மகிழ்ச்சிகரமான தம்பதி எனக் கூறியுள்ளனர்.
மூன்றாவது இடத்தில் அமிதாப் பச்சன்-ஜெயாபச்சன் ஜோடியை சுமார் 20 சதவீதம் மக்கள் தேர்வு செய்துள்ளனர். நான்காவது இடத்தை அமிர் கான்-கிரன் ராவ் ஜோடி பிடித்துள்ளது.
கோலிவுட், மல்லுவுட், டோலிவுட் என தென்னகத்திலும் கூட ஏராளமான பிரபல சினிமா தம்பதிகள் உள்ளனர். வடக்கில் உள்ளவர்களுக்கு இந்த சினிமாக்காரர்களை எல்லாம் தெரியாது போலும்!
Comments
தம்பதி ஜோடி காதலர்தினம் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் அமிதாப் ஷாருக்கான் அமிர்கான் ஜெயாபச்சன் jayabachan amitabh aishwaryarai couple sharukh aamir


Click it and Unblock the Notifications