செக்ஸ் கொடுமைக்கு எதிரான அலிபாபா

By Staff

Janani
அலுவலகம் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் செக்ஸ் தொல்லைகளை மையப்படுத்தி தயாராகி வரும் படம் அலிபாபா.

சமூகத்தை அச்சுறுத்தக்கூடிய இந்தப் பிரச்சனையை பொழுதுபோக்கு என்ற மசாலா தடவி பார்ப்பவர்களைச் சிந்திக்க வைக்க வருகிறது புது ஜோடி கிருஷ்ணா-ஜனனி மற்றும் அறிமுக இயக்குநர் நீலன் கே.சேகர்.

பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பிதான் கதாநாயகன் கிருஷ்ணா. விஷ்ணுவர்தனுடன் இணைந்து மணிரத்னத்தின் 'அஞ்சலி', இருவர்' படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். சந்தோஷ் சிவன் இயக்கிய டெரரிஸ்ட் படத்திலும் கதாநாயகனாக நடித்தவர்.

ஜனனி பஞ்சாபைச் சேர்ந்தவர். மும்பையில் மாடலாக சிலகாலம் வாசம் செய்துவிட்டு நேராக கோடம்பாக்கத்துக்கு குடிபெயர்ந்து விட்டார். இப்போது வேகவேகமாக தமிழ் கற்று வருகிறார். (அடுத்த குஷ்பு ஆகும் ஆசை எல்லாருக்கும் இருக்கத்தானே செய்யும்!)

டாக்கிங் டைம்ஸ் மூவிஸ் பட நிறுவனம் சார்பில் பட்டியல்' சேகர் (விஷ்ணுவர்தனின் தந்தை இவர்), சஞ்சீவ் கபூர் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் விஷ்ணுவர்தனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய நீலன் கே. சேகர்.

முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க, அழகம்பெருமாள், திலகன், ராதாரவி, பிஜூமேனன், காமெடி ஜீவா, மனோபாலா, டி.வி.லட்சுமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அலிபாபா படப்பிடிப்பு முடிந்து இப்போது ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

அது சரி... அலிபாபான்னா என்னங்க... இயக்குநர் சேகரிடம் கேட்டோம்.

அதிர்ஷ்டக்காரன்.... நல்ல எதிர்காலத்துக்குச் சொந்தக்காரன் என்று அர்த்தம் என்றார் அவர்.

நல்லது... தலைப்பில் உள்ள அதிர்ஷ்டம் படக்குழுவுக்கும் கிடைக்கட்டும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X