பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை..! - மு க அழகிரி

By Chakra

MK Azhagiri and Vairamuthu
நான் பழைய சினிமா பாடல்களைத்தான் அதிகமாகக் கேட்கிறேன். காரணம் பழைய பாடல்கள் போல புதிய பாடல்கள் இல்லை..." என்றார் மத்திய அமைச்சர் முக அழகிரி.

கே கிரியேஷன்ஸ் சார்பில் கே.ஆர்.கண்ணன், காதலாகி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை கே.ஆர்.விஷ்வா இயக்குகிறார்.

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை 'பிலிம்சேம்பர்' திரையரங்கில் நேற்று நடந்தது.

விழாவில், மத்திய உரம் மற்றும் ரசாயன மந்திரி மு.க.அழகிரி கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டுப் பேசினார்.

அவர் கூறுகையில், "எனக்கு திரைப் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். இங்கே கவிஞர் வைரமுத்து பேசும்போது, நான் பழைய சினிமா பாடல்களை அதிகமாக விரும்பி கேட்பதாக கூறினார். அது உண்மைதான். பழைய பாடல்கள் போல புதிய பாடல்கள் இல்லை.

நான் வீட்டில் இருக்கும்போதும், வெளியில் இருக்கும்போதும் பழைய பாடல்களைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

இன்று இங்கு மூன்று பாடல்களை கேட்டவுடன், குறிப்பாக ரைஹானா இசையில் அந்த பாடல்களை கேட்டபோது, புதிய பாடல்களையும் இனிமேல் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

அதற்காக புதிய பாடல்களை நான் ஒரேயடியாக கேட்பதில்லை என்று சொல்லிவிட முடியாது. புதிய பாடல்களை அதிகமாகக் கேட்பதில்லை. அவ்வளவுதான்..." என்றார்.

விழாவில் கலைஞர் டி.வி. நிர்வாகி அமிர்தம், கவிஞர் வைரமுத்து, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து ஆகியோரும் பேசினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X