இப்போ தான் நிம்மதி-அமிதாப்

அவர் நடித்து இப்போது வெளியாகியுள்ள தி லாஸ்ட் லியர் படத்தின் பப்ளிசிட்டி நிகழ்ச்சி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இதில் அமிதாப், இயக்குநர் ரிதுபர்னோ கோஷ், தயாரிப்பாளர் அரிந்தம் சௌத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமிதாப் பேசியதாவது:
எங்கள் குடும்பத்துக்கு எதிரான போராட்டங்களை மகாராஷ்ட்ரா நிர்மாண் சமிதி வாபஸ் பெற்றுக் கொண்டதில் மிகுந்த சந்தோஷமடைகிறேன். அவர்களுக்கு நன்றி. மக்கள் என் படத்தை இனி தடையின்றிப் பார்க்க முடியும். ஒரு கலைஞனுக்கு இதைவிட நிம்மதி வேறென்ன இருக்க முடியும்? எனவே இப்போதுதான் நான் நிம்மதியாக உணர்கிறேன்.
மன்னிப்பு கேட்டதில் என் இமேஜ் பாதிக்கப்பட்டதாக நான் உணரவில்லை. ரசிகர்கள் அன்பை முழுமையாய் உணர்ந்தவன் நான்... இந்தப் படம் ஒரு நல்ல முயற்சி. கட்டாயம் பாருங்கள், என்றார் அமிதாப்.
இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் கூறுகையில், ஒருமுறை அமிதாப்புடன் படம் செய்த இயக்குநர்கள் யாராக இருந்தாலும், மீண்டும் மீண்டும் அவரை வைத்துதான் படம் எடுக்க ஆசைப்படுவார்கள். அந்த அளவு நல்ல மனிதர் அவர். மிகச் சிறந்த கலைஞர் என்றார்.


Click it and Unblock the Notifications











