twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்டெபி புகார்: ரகுவண்ணன்-சீமான் மீது வழக்கு!

    By Staff
    |

    Raguvannan with Stephy
    சென்னை: பெண் உதவி இயக்குநர் ஸ்டெபி கொடுத்த செக்ஸ் புகாரின் அடிப்படையில் நடிகரும் இயக்குநருமான மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதே போல ஸ்டெபியை வீடு தேடிப்போய் மிரட்டியதற்காக இயக்குநர்கள் சீமான், தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

    சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்டெபி (20), சில திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனுவில்,

    நடிகர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணனும், நானும் ஒருவரையொருவர் காதலித்தோம். 8 மாதங்களாக எங்கள் காதல் நீடித்தது. என்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் கேட்டேன். இதற்கு அவர் சம்மதித்தார். 28.12.2007 அன்று போனில் என்னை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்தார். திருமணத்திற்கு தனது பெற்றோர் சம்மதித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, நான், அவரது வீட்டுக்கு சென்றேன். வீட்டில் அவரை தவிர, வேறு யாரும் இல்லை. ஆனால், அவர், அவரது பாட்டி போட்டோ முன்பு வைத்து எனக்கு தாலி கட்டினார். எனக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், அவரோடு சேர்த்து என்னை படம் எடுத்துக்கொண்டார்.

    நாங்கள் இருவரும் கணவன்- மனைவியாக வாழ்க்கையை நடத்தி வந்தோம். ஆனால், அவரது வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லவில்லை. ஒருகட்டத்தில் அப்படி அழைத்துச் செல்ல முடியாது எனக் கூறிவிட்டார். ஆனால், ரகுவண்ணனும், அவரது குடும்பத்தாரும் என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு போலீசாரும் என்னை பயமுறுத்துகிறார்கள். ரகுவண்ணன் குடும்பத்தாருக்கு ஆதரவாக சீமான், தமிழ்செல்வன் ஆகியோரும் என்னை வீடு தேடிவந்து மிரட்டுகிறார்கள்.

    சீமானைக் கைது செய்யுங்கள்!:

    குறிப்பாக இயக்குநர் சீமான் மிகவும் கடுமையாக என்னை மிரட்டினார். ஆனால் அவர்மீது நான் கொடுத்த புகாரின்மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ரகுவண்ணன் குடும்பத்தினர் மீது, நான் கூறிய குற்றச்சாட்டு குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும். ஆனால், 'காதலித்தீர்கள், ஒன்றாக இருந்தீர்கள்' என்ற காரணத்துக்காகவெல்லாம் இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று கூறிவிட்டனர் போலீசார்.

    ஆகவே, நான் கொடுத்த புகாரை குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாஷா, ஸ்டெபி கொடுத்த புகாரீன் அடிப்படையில் ரகுவண்ணன் மற்றும் ஸ்டெபியால் குற்றம் சாட்டப்பட்டுள்ள இயக்குநர் சீமான் உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X