இந்து புராண நாயகர்களை ஹீரோவாக்கும் டிஸ்னி!

இதற்காக இந்தியாவின் விமானிகா காமிக்ஸ் எனும் பதிப்பகத்தோடு கூட்டணி அமைக்கிறது வால்ட் டிஸ்னி. விமானிகா தனது வெளியீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் மகாபாரத ஹீரோக்களில் ஒருவரான கர்ணன் பாத்திரத்தை மையப்படுத்தி புதிய படம் ஒன்றைத் தயாரிக்கப் போகிறதாம் டிஸ்னி. இதேபோல மேலும் பல பாத்திரங்களை மையப்படுத்தி புதிய படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது டிஸ்னி.
மேற்குலக நாட்டு மிகப் பிரபலமான திரைப்பட நிறுவனம் ஒன்று, இந்திய நிறுவனத்துடன் புதிய படத்துக்கு ஒப்பந்தம் போடுவது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
விமானிகா நிறுவனம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நிறைய காமிக்ஸ்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த நிறுவனத்தின் வெளியீடுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பிரிட்டனிலும் இப்போது விற்பனையைத் துவங்கியுள்ளது விமானிகா.
More from Filmibeat
கர்ணன் புராண நாயகர்கள் வால்ட் டிஸ்னி விமானிகா disney indian mythology karnan venture vimanika publishers


Click it and Unblock the Notifications











