பிப் 4-ல் ஜெனிலியா - ரிதேஷ் தேஷ்முக் திருமணம்?
ஜெனிலியா - ரிதேஷ் இருவரும் சேர்ந்து நடித்த முதல் படமான துஜே மேரி கஸம் 2003ல் வெளியானது. அப்போதிலிருந்து இருவரும் காதலித்து வந்தனர்.
ஆனால் இந்தக் காதலுக்கு ரிதேஷ் வீட்டில் கடும் எதிர்ப்பு நிலவியது. ஆனால் இருவரும் காதலில் உறுதியாக நின்றதால், திருமணத்துக்கு சம்மதித்துவிட்டனர் பெற்றோர்.
சமீபத்தில்தான் இருவருக்கும் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது நினைவிருக்கலாம்.
வரும் பிப்ரவரி 4-ம் தேதி ஜெனிலியா - ரிதேஷ் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும் மட்டும் அழைக்க இரு குடும்பத்தினரும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிலியா நடித்த தமிழ்ப் படம் வேலாயுதம் வெற்றி பெற்றுள்ளது. அவர் நடித்த உருமி படம் மலையாளத்தில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. தமிழிலும் இந்தப் படம் வெளியாகிறது. அடுத்து தனுஷ் படத்திலும் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவர் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications












