தெலுங்கில் கலக்கும் அக்பர்காரு!

அசுதோஷ் கோவரிகர் இயக்கத்தில், ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியாகியுள்ள இந்திப் படம் ஜோதா அக்பர். இப்படம் இந்தியில் பெரும் வெற்றி பெற்றது.
சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கிலும் இதன் டப்பிங் வெளியானது. இதில் தமிழை விட தெலுங்குப் பதிப்புக்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்துள்ளதாம்.
இதுகுறித்து அசுதோஷ் கோவரிகர் கூறுகையில், தமிழை ஒப்பிடும்போது தெலுங்கில் சிறப்பாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் இந்தி பதிப்பும் வெளியிடப்பட்டது. இருப்பினும் ஆந்திராவில் இரு மொழிகளிலும் ஜோதா அக்பர் சிறப்பாக ஓடுகிறது.
தமிழில் ஜோதா அக்பர் சரியாக போகாதற்கு காரணம் கிமு.1000 என்ற ஹாலிவுட் படத்தின் தமிழ் டப்பிங் வெளியானதே முக்கிய காரணம் என்று விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் தமிழ் ஜோதா அக்பரும் விரைவில் பிக்கப் ஆகும் என நம்புகிறேன்.
இப்படம் வெற்றி பெற்றிருப்பது எனக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆனால் பல பிரச்சினைகளுக்குப் பிறகுதான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. ராஜஸ்தானில் ஏற்பட்ட அனுபவம் இன்னும் கசப்பானதாகவே இருக்கிறது. இந்தப் படம் உண்மையில் ராஜஸ்தானுக்கான படம். ஆனால் அங்கு படத்தை திரையிட முடியவில்லை என்றார் கோவரிகர்.


Click it and Unblock the Notifications