கந்தசாமிக்கு யுஏ!

பெரியவர்கள் மற்றும் பெரியவர்கள் அனுமதியுடன் சிறியவர்களும் பார்க்கும் விதத்தில் யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தச் சான்றிதழ் கந்தசாமியின் தெலுங்குப் பதிப்பான மல்லன்னாவுக்குக் கொடுக்கப்பட்டது. தமிழ்ப் பதிப்புக்கு இன்று சென்னையில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. மொத்தம் 1000 திரையரங்குகளில் வெளியாவதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் மட்டும், 245 திரையரங்குகளில் வெளியாகிறதாம். தமிழ்ப் படம் இத்தனை தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல்முறையாம்.
Comments


Click it and Unblock the Notifications